/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பட்டாசுகளை பாதுகாப்பாக கையாள தீயணைப்பு துறை செயல்விளக்கம்
/
பட்டாசுகளை பாதுகாப்பாக கையாள தீயணைப்பு துறை செயல்விளக்கம்
பட்டாசுகளை பாதுகாப்பாக கையாள தீயணைப்பு துறை செயல்விளக்கம்
பட்டாசுகளை பாதுகாப்பாக கையாள தீயணைப்பு துறை செயல்விளக்கம்
ADDED : அக் 27, 2024 01:01 AM
பட்டாசுகளை பாதுகாப்பாக கையாள
தீயணைப்பு துறை செயல்விளக்கம்
ஓசூர், அக். 27-
கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி டோல்கேட் அருகே இயங்கி வந்த பட்டாசு கடை மற்றும் கிடங்கில் கடந்தாண்டு அக்., 7 ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில், தமிழகத்தை சேர்ந்த, 15 பேர் உட்பட, 16 பேர் உயிரிழந்தனர். அதனால், பட்டாசு விற்பனைக்கு பல கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது. கர்நாடகா மக்களின் விற்பனையை குறிவைத்து, தமிழக எல்லையான ஓசூரில், பட்டாசு கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஓசூர் தாலுகாவில் மட்டும், 42 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு தனிநபர்கள் உரிமம் பெற்றுள்ளனர். அதேபோல், 70க்கும் மேற்பட்ட நிரந்தர உரிமம் பெற்ற கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு பட்டாசு விற்பனை தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஓசூரில், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று, பட்டாசு விற்பனை மும்முரமாக இருக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
ஓசூரிலுள்ள பட்டாசு கடைக்காரர்கள், தொழிலாளர்கள் பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக கையாள வேண்டுமென, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா தலைமையில், ஜூஜூவாடியில் நேற்று தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். அப்போது, பட்டாசு கடைகளில் அவசரகால வழி ஏற்படுத்தியிருக்க வேண்டும், என்பன உட்பட அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது. ஓசூர் தாசில்தார் சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.