/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொட்டப்பட்டிருந்த கழிவுகளில் தீ
/
கொட்டப்பட்டிருந்த கழிவுகளில் தீ
ADDED : மார் 27, 2024 08:01 AM
ஓசூர் : ஓசூர் அருகே, திறந்த வெளியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளில் நேற்று தீப்பிடித்து எரிந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த சிவக்குமார் என்பவர், ஒன்னல்வாடி அடுத்த தொரப்பள்ளி அக்ரஹாரம் கூட்ரோட்டின் அருகே, ராயக்கோட்டை சாலையோரம் திறந்த வெளியில் பிளாஸ்டிக் மற்றும் அட்டை பெட்டிகள், பாட்டில்களை கொட்டி வைத்துள்ளார். அதன் அருகே உள்ள ஒரு கட்டடத்தையும் குடோனாக பயன்படுத்தி வருகிறார். நேற்று மதியம், 3:00 மணிக்கு, திறந்த வெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த கழிவுகளில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி கரும்புகையுடன் கொளுந்து விட்டு எரிந்தது. அவ்வப்போது பாட்டில்கள் வெடித்து சிதறின.
ஓசூர் தீயணைப்புத்துறையினர், இரு வாகனங்களை கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அருகில் உள்ள குடோனுக்கும் தீ பரவ துவங்கியது. தீயணைப்பு வாகனங்களை தொடர்ந்து இயக்க தண்ணீர் இல்லை. அதனால் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து மணிக்கணக்கில் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு
வந்தனர்.

