/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கூரை கொட்டகையில் தீ; விவசாயி உடல் கருகி சாவு
/
கூரை கொட்டகையில் தீ; விவசாயி உடல் கருகி சாவு
ADDED : ஜூலை 10, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, மகாதேவகொல்லஹள்ளி கணபதி நகரை சேர்ந்த விவசாயி சின்னசாமி, 75; இவர் நேற்று முன்தினம் இரவு தன் விவசாய நிலத்திலுள்ள கூரை கொட்டகையில் படுத்து துாங்கியுள்ளார்.
இரவு, 11:00 மணியளவில் கொட்டகையில் தீப்பிடித்தது. போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் வந்து கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். ஆனால், இந்த தீ விபத்தில் சின்னசாமி உடல் கருகி பலியானார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.