/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடோனில் பதுக்கி வைத்த ரூ.17 லட்சம் பட்டாசு பறிமுதல்
/
குடோனில் பதுக்கி வைத்த ரூ.17 லட்சம் பட்டாசு பறிமுதல்
குடோனில் பதுக்கி வைத்த ரூ.17 லட்சம் பட்டாசு பறிமுதல்
குடோனில் பதுக்கி வைத்த ரூ.17 லட்சம் பட்டாசு பறிமுதல்
ADDED : அக் 07, 2024 03:17 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, கர்நாடகா எல்லை அத்திப்பள்ளி டோல்கேட் அருகே, பட்டாசு கடை மற்றும் கிடங்கில் கடந்தாண்டு அக்.,7ல் நடந்த வெடி விபத்தில், தமிழகத்தை சேர்ந்த, 15 பேர் உட்பட, 17 பேர் இறந்தனர்.
இதனால் கர்நாடகா மாநிலத்தில் பட்டாசு கடை திறக்க பல்வேறு நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் பலர் பட்டாசு கடை வைக்க விரும்பவில்லை. இந்நிலையில் கர்நாடக மக்களின் வியாபாரத்தை குறிவைத்து, தமிழக எல்லையான ஓசூர், ஜூஜூவாடி உட்பட நகரின் பல்வேறு இடங்களில், கடை மற்றும் குடோன்களில் பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.இந்நிலையில் கலெக்டர் சரயு உத்தரவின்படி, ஓசூர்
பகுதியில் பட்டாசு கடை, குடோன்களில் வருவாய் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.கோவிந்த அக்ர ஹாரம், எஸ்.எஸ்.நகரில், பிரதீப்குமார் என்பவரது குடோனில், பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களின் புகார் படி, சிப்காட் போலீசார் குடோனில் இருந்த, 17 லட்சம் ரூபாய்
மதிப்பிலான, 7,830 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, மாதன்கோவில்பட்டியை சேர்ந்த பட்டாசு வியாபாரி செல்வகுமார், 39, என்பவரை கைது செய்தனர்.