/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முதல் கட்ட நீச்சல் பயிற்சி; முடித்தவர்களுக்கு சான்றிதழ்
/
முதல் கட்ட நீச்சல் பயிற்சி; முடித்தவர்களுக்கு சான்றிதழ்
முதல் கட்ட நீச்சல் பயிற்சி; முடித்தவர்களுக்கு சான்றிதழ்
முதல் கட்ட நீச்சல் பயிற்சி; முடித்தவர்களுக்கு சான்றிதழ்
ADDED : ஏப் 14, 2025 07:18 AM
கிருஷ்ணகிரி: கோடை விடுமுறையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு, ஐந்து கட்டங்களாக நீச்சல் பயிற்சி வழங்கப்படுகிறது. முதல் கட்ட நீச்சல் பயிற்சி கடந்த, 1ல் துவங்கி வரும், 13 வரை நடந்தது. இதில் பங்கேற்ற, 21 ஆண்கள், 11 பெண்கள் என மொத்தம், 32 பேர் பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு, நேற்று மாவட்ட நீச்சல் பயிற்றுனர் முனிரத்தினம் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், 2ம் கட்ட பயிற்சி வரும், 15 முதல், 27 வரையும், 3ம் கட்ட பயிற்சி, 29 முதல் மே, 11 வரையும், 4ம் கட்ட பயிற்சி மே 13 முதல், 25 வரையும், 5ம் கட்ட பயிற்சி, 27 முதல் ஜூன் 8 வரையும் நீச்சல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரையும், மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரையும் தலா ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நீச்சல் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கட்டணமாக, 1,500 ரூபாய் மற்றும், 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன், https://sdatservices.tn.gov.in/#/membershipbooking/register என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.