sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பஞ்., செயலாளர்கள் போராட்டம்; பணிகள் பாதித்ததாக குற்றச்சாட்டு

/

பஞ்., செயலாளர்கள் போராட்டம்; பணிகள் பாதித்ததாக குற்றச்சாட்டு

பஞ்., செயலாளர்கள் போராட்டம்; பணிகள் பாதித்ததாக குற்றச்சாட்டு

பஞ்., செயலாளர்கள் போராட்டம்; பணிகள் பாதித்ததாக குற்றச்சாட்டு


ADDED : ஜன 09, 2026 07:16 AM

Google News

ADDED : ஜன 09, 2026 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பஞ்., செயலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமபுறங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக்கோரி, சென்னையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த, 3 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் பணியாற்றும் பஞ்., செயலாளர்கள் விடுப்பு எடுத்து பங்கேற்றுள்ளதால், கிராம புறங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பொங்கல் விழாவிற்காக தெருக்களில் துாய்மை பணிகள் மேற்கொள்ளுதல், தெருவிளக்குகள் சரி செய்யும் பணிகள், மடங்கி உள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், சில பஞ்., அலுவலகங்கள் பூட்டப்பட்டுள்ளதால், பல்வேறு பணிகளுக்காக அலுவலகத்திற்கு வரும் மக்கள், ஏமாற்றத்துடன் திரும்ப செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us