/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தென்பெண்ணை கரையோர மக்களுக்கு 5வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
/
தென்பெண்ணை கரையோர மக்களுக்கு 5வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
தென்பெண்ணை கரையோர மக்களுக்கு 5வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
தென்பெண்ணை கரையோர மக்களுக்கு 5வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : அக் 10, 2025 12:51 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 8 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக, கே.ஆர்.பி., அணையில், 21.80 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், ராயக்கோட்டை, 9, தேன்கனிக்கோட்டை, 7, கிருஷ்ணகிரி, 3.20, கெலவரப்பள்ளி அணை, 2, சூளகிரி, 2, என மொத்தம், 45 மி.மீ., மழை பதிவானது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 1,354 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 1,348 கன அடியாக குறைந்தது. அணை மொத்த உயரமான, 52 அடியில், 49.85 அடியாக நீர்மட்டம் உள்ளதால், பாசன கால்வாய் மற்றும் தென்பெண்ணை ஆற்றில், 1,409 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்வதாலும், கெலவரப்பள்ளி அணையில் இருந்து அதிக நீர்திறப்பாலும், தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், 5வது நாளாக தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.