/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவ மாணவியருக்கு பேச்சு, கவிதை போட்டி
/
மாணவ மாணவியருக்கு பேச்சு, கவிதை போட்டி
ADDED : அக் 10, 2025 12:51 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியரிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி, முதல், 2ம் மற்றும் 3ம் பரிசுகள் முறையே, 10,000 ரூபாய், 7,000 ரூபாய் மற்றும், 5,000 ரூபாய் பரிசு வழங்குவதோடு, பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
இப்போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர், சென்னையில் நடக்கும் மாநில போட்டியில் அரசு செலவில் செல்லும் வாய்ப்பையும் பெறுவர். அதன்படி பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் வரும், 14ம் தேதியிலும் கல்லுாரி மாணவர்களுக்கு, 15ம் தேதி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியிலும் நடக்கிறது. விண்ணப்பப்படிவம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.