/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் வன சரகத்தில் 30 யானைகள் முகாம் விரட்ட முடியாமல் வனத்துறை தவிப்பு
/
ஓசூர் வன சரகத்தில் 30 யானைகள் முகாம் விரட்ட முடியாமல் வனத்துறை தவிப்பு
ஓசூர் வன சரகத்தில் 30 யானைகள் முகாம் விரட்ட முடியாமல் வனத்துறை தவிப்பு
ஓசூர் வன சரகத்தில் 30 யானைகள் முகாம் விரட்ட முடியாமல் வனத்துறை தவிப்பு
ADDED : டிச 10, 2024 07:58 AM
ஓசூர்: ஓசூர் வனப்பகுதியில், 3 குழுக்களாக முகாமிட்டுள்ள, 30க்கும் மேற்பட்ட யானைகளை விரட்ட முடியாமல், வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து வெளியேறிய, 150க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்-கோட்டை, ஜவளகிரி, ஓசூர், ராயக்கோட்டை, அஞ்செட்டி வனச்ச-ரகங்களில் பல குழுக்களாக முகாமிட்டுள்ளன.
ஓசூர் வனச்சரகம் சானமாவு காப்புக்காட்டில், 30 க்கும் மேற்-பட்ட யானைகள், 3 குழுக்களாக
முகாமிட்டுள்ளன. அவற்றை ஒன்றாக இணைத்து விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து
வருகின்றனர். இரவில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், அருகே கிராமங்களில், தக்காளி, ராகி,
சோளம் போன்ற பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்-வதால், விவசாயிகள் வேதனையில்
உள்ளனர்.குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானைகள் ஆக்ரோஷமாக உள்-ளதால், சானமாவு வனப்பகுதியை
ஒட்டிய, அனுமந்தபுரம், சினி-கிரிப்பள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் பாதுகாப்பாக
இருக்குமாறும், வனத்திற்குள் ஆடு, மாடு, மேய்க்கவோ, விறகு சேகரிக்கவோ, இரவில் விவசாய
நிலங்களுக்கு காவலுக்கு செல்-லவோ வேண்டாமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். சான-மாவு
வனப்பகுதியிலிருந்து, தேன்கனிக்கோட்டைக்கு யானை-களை விரட்டும் முயற்சியில்
வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.