/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூருக்கு இடம் பெயர்ந்த 40க்கும் மேற்பட்ட யானைகள் வனத்துறையினர் கண்காணிப்பு; மக்களுக்கு எச்சரிக்கை
/
ஓசூருக்கு இடம் பெயர்ந்த 40க்கும் மேற்பட்ட யானைகள் வனத்துறையினர் கண்காணிப்பு; மக்களுக்கு எச்சரிக்கை
ஓசூருக்கு இடம் பெயர்ந்த 40க்கும் மேற்பட்ட யானைகள் வனத்துறையினர் கண்காணிப்பு; மக்களுக்கு எச்சரிக்கை
ஓசூருக்கு இடம் பெயர்ந்த 40க்கும் மேற்பட்ட யானைகள் வனத்துறையினர் கண்காணிப்பு; மக்களுக்கு எச்சரிக்கை
ADDED : நவ 28, 2024 06:55 AM
ஓசூர்: ஓசூர் வனப்பகுதிக்கு, 40 க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்துள்ள நிலையில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்க-ளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள, ராயக்-கோட்டை, உரிகம், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய, 7 வனச்சரக பகுதிகளில் மொத்தம், 250க்கும்
மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் ராயக்-கோட்டை வனச்சரகத்தில் உள்ள ஊடேதுர்க்கம்
காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த, 60க்கும் மேற்பட்ட யானைகளில், 40க்கும் மேற்-பட்ட யானைகள் தனியாக
பிரிந்து, நேற்று முன்தினம் இரவு, நாக-மங்கலம் கிராமத்தை கடந்து, ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட
சானமாவு காப்புக்காட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளன.
இதனால், வனப்பகுதியை ஒட்டியுள்ள சினிகிரிபள்ளி, அனுமந்-தபுரம், டி.கொத்தப்பள்ளி,
கொம்மேப்பள்ளி, சானமாவு, பென்-னிக்கல், பீர்ஜேப்பள்ளி, ராமாபுரம், போடூர், ஆழியாளம் உட்பட பல்வேறு
கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், இரவு நேரங்களில் விவசாய நிலத்திற்கு காவலுக்கு செல்ல
வேண்டாம் எனவும், வனத்திற்குள் ஆடு, மாடு மேய்க்கவோ, விறகு சேகரிக்-கவோ செல்ல வேண்டாம் என,
வனத்துறையினர் எச்சரித்துள்-ளனர்.
சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் ராகி அறுவ-டைக்கு தயாராக உள்ளது. யானைகள்
ராகியை விரும்பி உண்ணும் என்பதால், ராகி பயிர்கள் யானைகளால் சேதமாகும் நிலை உருவாகியுள்ளது.
அவற்றை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யானைகள் எந்த நேரத்-திலும்
ஓசூர் - ராயக்கோட்டை சாலையை கடந்து, போடூர்பள்ளம் வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது.
அதனால், ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி தலைமையில், 20 க்கும் மேற்பட்ட வனத்துறையினர், யானைகள்
நடமாட்டத்தை கண்காணித்து, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு விரட்டும் பணியில் தீவிர-மாக
ஈடுபட்டுள்ளனர்.