/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடகா திரும்பாத 20 யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர்
/
கர்நாடகா திரும்பாத 20 யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர்
கர்நாடகா திரும்பாத 20 யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர்
கர்நாடகா திரும்பாத 20 யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர்
ADDED : மே 08, 2025 01:23 AM
ஓசூர்:கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து ஆண்டுதோறும் செப்., அக்., மாதங்களில் வெளியேறும், 150க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக எல்லையான ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஜவளகிரி வனச்சரகம் வழியாக நுழைந்து, தேன்கனிக்கோட்டை, ஓசூர் வழியாக ஆந்திர மாநில எல்லை வரை சென்று, திரும்பி வருவது வாடிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்., மாதத்திற்குள் இடம் பெயர்வு யானைகள் மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு திரும்பி விடும். ஆனால், கடந்தாண்டு அக்., மாதம் இடம் பெயர்ந்த, 150க்கும் மேற்பட்ட யானைகளில், 130 யானைகள் மட்டும் இதுவரை திரும்பிச் சென்றுள்ளன.
மீதமுள்ள, 20க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக எல்லையான ஜவளகிரி வனச்சரகத்தில் முகாமிட்டுள்ளன. கர்நாடகா மாநிலத்திற்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.