/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோஷ்டி பூசல்களை மறந்து தேர்தல் பணியாற்றுங்கள்: முதல்வர் அறிவுரை
/
கோஷ்டி பூசல்களை மறந்து தேர்தல் பணியாற்றுங்கள்: முதல்வர் அறிவுரை
கோஷ்டி பூசல்களை மறந்து தேர்தல் பணியாற்றுங்கள்: முதல்வர் அறிவுரை
கோஷ்டி பூசல்களை மறந்து தேர்தல் பணியாற்றுங்கள்: முதல்வர் அறிவுரை
ADDED : நவ 09, 2025 03:45 AM
ஓசூர்: ஓசூர் சட்டசபை தொகுதியில், கோஷ்டி பூசல்களை மறந்து, தேர்தல் பணியாற்றுங்கள் என, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மற்றும் ஓசூர் மாநகர செய-லாளர் மேயர் சத்யா ஆகியோரை, முதல்வர் ஸ்டாலின் அறிவு-றுத்தி உள்ளார்.
தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், 'உடன்-பிறப்பே வா' என்ற தலைப்பில், தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வேப்பனஹள்ளி தொகுதிக்கு, ஏற்கனவே நிர்வாகிகள் சந்திப்பு முடிந்து விட்ட நிலையில், ஓசூர் சட்டசபை தொகுதிக்கான நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மற்றும் ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா, பகுதி செயலாளர்கள் ஆனந்-தய்யா, வெங்கடேஷ், ராமு, ராஜா மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கஜேந்திரமூர்த்தி, லோகேஷ்ரெட்டி, ராமமூர்த்தி ஆகியோரை, தனித்தனியாக முதல்வர் சந்தித்து பேசினார்.
மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மற்றும் ஓசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் உடனான சந்திப்பு தலா, 15 நிமிடங்க-ளுக்கு மேல் நீடித்தது. அதன் பின் இருவரையும் ஒன்றாக அழைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
அப்போது, ஓசூர் சட்டசபை தொகுதியில் இருவரும் கோஷ்டி பூசல் செய்யக்கூடாது. அதனால் பிரிவு ஏற்படும். கோஷ்டி பிரச்-னையை மறந்து, கட்சி நிர்வாகிகளை அரவணைத்து, இருவரும் இணைந்து செயல்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், மேற்கு மாவட்டத்திலுள்ள ஓசூர் மட்டுமின்றி, தளி, வேப்பனஹள்ளி தொகுதியிலும் தி.மு.க., வெற்றி பெற வேண்டும். அதனால், அனைத்து நிர்வாகிகளையும் அரவணைத்து செல்ல, எம்.எல்.ஏ., பிரகாஷை அறிவுறுத்தி உள்ளார்.
எம்.எல்.ஏ., பிரகாஷ், மேயர் சத்யா ஆதரவாளர்கள் இடையே உள்ள கோஷ்டி பிரச்னையை உளவுப்பிரிவு மூலமாக அறிந்த ஸ்டாலின், இருவரையும் ஒன்றாக சேர்த்து வைக்க, ஆலோசனை வழங்கியுள்ளார்.
வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி உருவாக்கப்பட்டு, 2011ல் நடந்த முதல் தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் செங்குட்டுவன் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் முருகன் வெற்றி கண்டார்.
2021 தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட முனுசாமி வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் வேப்பனஹள்ளி தொகு-தியில் அவர் மீண்டும் போட்டிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதனால், வேப்பனஹள்ளி தொகுதியில் கண்டிப்பாக, தி.மு.க., வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கான பணிகளில் ஈடுபடுங்கள் என, மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ.,விடம், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

