/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பண பிரச்னைக்காக இருவரை கடத்தி கொன்றவர் சுட்டுப்பிடிப்பு
/
பண பிரச்னைக்காக இருவரை கடத்தி கொன்றவர் சுட்டுப்பிடிப்பு
பண பிரச்னைக்காக இருவரை கடத்தி கொன்றவர் சுட்டுப்பிடிப்பு
பண பிரச்னைக்காக இருவரை கடத்தி கொன்றவர் சுட்டுப்பிடிப்பு
ADDED : நவ 10, 2025 01:19 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பொம்மசந்திராவை சேர்ந்தவர் ரவீந்திர பிரசாத் ரெட்டி, 40; அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், தன்னிடம் சீட்டு போட்ட பணக்காரர்களை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார். கித்தனஹள்ளியை சேர்ந்த மாதேஷ், 41, என்பவரிடம் பணம் கேட்டு, அவர் கொடுக்காததால் நவ., 4ல் அவரை கடத்தி கொலை செய்தார்.
நவ., 6ல் தொழிலதிபர் பாலப்பாரெட்டி, 52, என்பவரை கடத்தி, 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார். அவரது குடும்பத்தினர் பணம் கொடுக்காததால், அவரை வெட்டி கொன்று, தமிழக எல்லையான பேரண்டப்பள்ளி வனத்தில் வீசினார்.
ஹெப்பகோடி போலீசார் விசாரித்தனர். அதில், இருவரையும் கொன்றது ரவீந்திர பிரசாத் ரெட்டி என்பது தெரிந்தது. நேற்று முன்தினம், அவரை போலீசார் கைது செய்தனர்.
பாலப்பாரெட்டியை கொலை செய்த ஹெப்பகோடி மயானத்திற்கு, ரவீந்திர பிரசாத் ரெட்டியை விசாரணைக்காக அன்றிரவு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, போலீசாரை தாக்கி தப்ப முயன்றதில், போலீசார் அவரை இரு கால்களிலும் சுட்டு பிடித்தனர்.

