/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., மாஜி - அ.தி.மு.க., நிர்வாகி கல்குவாரி ஒப்பந்தத்தில் பரஸ்பர புகார்
/
தி.மு.க., மாஜி - அ.தி.மு.க., நிர்வாகி கல்குவாரி ஒப்பந்தத்தில் பரஸ்பர புகார்
தி.மு.க., மாஜி - அ.தி.மு.க., நிர்வாகி கல்குவாரி ஒப்பந்தத்தில் பரஸ்பர புகார்
தி.மு.க., மாஜி - அ.தி.மு.க., நிர்வாகி கல்குவாரி ஒப்பந்தத்தில் பரஸ்பர புகார்
ADDED : மே 14, 2025 01:46 AM
கிருஷ்ணகிரி, கல்குவாரி ஒப்பந்தப்பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில், கிருஷ்ணகிரி, தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் நவாப், நாகரசம்பட்டி, அ.தி.மு.க., நகர செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் ஒருவர் மீது ஒருவர்
எஸ்.பி., அலுவலகத்தில், பரஸ்பர புகார் அளித்துள்ளனர்.
நாகரசம்பட்டி, அ.தி.மு.க., நகர செயலாளர் அண்ணாதுரை, நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
கிருஷ்ணகிரி, பழையபேட்டையை சேர்ந்த கிருஷ்ணகிரி, தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் நவாப்புக்கு சொந்தமான சிகாரிமேட்டிலுள்ள கல்
குவாரியை கடந்த, 2019 ஜூலை, 11ல் ராயல்டி ஒப்பந்த அடிப்படையில், 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தேன். ஒப்பந்த காலம் முடிந்து ஓராண்டாகியும், 1.30 கோடி ரூபாய் குத்தகை முன்பணத்தை நவாப் திரும்ப
வழங்கவில்லை.
இதுகுறித்து கேட்க, நவாப் வீட்டிற்கு கடந்த, 11ல் என் மனைவி அருள்மொழி அவரது சகோதரி அரசுராணி சென்றபோது, நவாப்பும், அவரது மனைவியும், நகரமன்ற தலைவருமான பரிதா நவாப்பும், வேலையாட்களை வைத்து என் மனைவி, அவரது சகோதரியை தள்ளிவிட்டு, நாயை விட்டு கடிக்க வைத்து கொன்று விடுவோம் என, மிரட்டி அனுப்பினர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கல்குவாரி குத்தகை முன்பணத்தையும் பெற்று தர வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நவாப் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகாரில், 'என் கல்குவாரியில் கற்கள் எடுத்து சென்ற அண்ணாதுரை, அதற்கான தொகையை வழங்கவில்லை. அவர்கள் தரப்பில் எனக்கு, 1.60 கோடி ரூபாய் தர வேண்டும். அதை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என
தெரிவித்துள்ளார்.