/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு மாஜி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு மாஜி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு மாஜி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு மாஜி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : செப் 14, 2025 05:11 AM
ஓசூர்: ''உள்ளூர் இளைஞர்களுக்கு, 80 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண் டும்,'' என, ஓசூர், காங்., முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தொழில் நகரான ஓசூருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை பெற்று தந்த, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இந்த முதலீடு
கள் மூலம் வரும் வேலைவாய்ப்புகளில், 80 சதவீதத்தை உள்ளூர் இளைஞர்கள், பெண்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வேலைவாய்ப்பு கிடைக்கா விட்டால், வரும் காலத்தில் மோச-மான குற்ற செயல்களுக்கு இளைஞர்கள் துாண்டப்பட வாய்ப்புள்-ளது. எனவே, வேலைவாய்ப்பு வழங்குவதை சரியான முறையில் சீர்படுத்தி செயல்படுத்த, அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
அதேபோல், சரியாக செயல்படும் அமைச்சரை, மாவட்டத்திற்கு நியமித்து, முடிவெடுக்கும் அதிகாரியை அனுப்பி, நகரின் வளர்ச்-சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் வருகைக்காக வேகம், வேகமாக பணி செய்யும் மாநகராட்சி நிர்வாகம், இது-வரை ஏன் அப்படி பணி செய்யவில்லை. ஓசூருக்கு, டிட்கோ மூலமாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதாக கூறப்படு-கிறது.
ஏற்கனவே, டிட்கோ செயல்படாத அமைப்பாக உள்ளது. ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போதும், மண் சாலைகளாக உள்ளன. எனவே, ஓசூருக்கு என்னென்ன செய்ய வேண்டும் என, கூட்டணி கட்சியினரையும் அழைத்து பேசி, முதல்வர் உரிய நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சின்ன குட்டப்பா உடனிருந்தார்.