/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
18 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவ, மாணவியர்
/
18 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவ, மாணவியர்
18 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவ, மாணவியர்
18 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவ, மாணவியர்
ADDED : ஆக 21, 2025 01:46 AM
கிருஷ்ணகிரி, எம்.சி.,பள்ளி காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 18 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், எம்.சி.,பள்ளி காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 2006-2007ம் ஆண்டு பிளஸ் 2 படித்த அனைத்து பாடப்பிரிவு முன்னாள் மாணவ, மாணவியர், 18 ஆண்டுகளுக்கு பிறகு, அவர்கள் படித்த பள்ளியில் ஒன்று கூடும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், முன்னாள் தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் காமராஜன், பாலதண்டாயுதம், சாமிகண்ணு, பசவராஜ், ராமச்சந்திரன், உமா, பிலிப்ஜோதி மற்றும் கணினி அறிவியல் ஆசிரியர் சுகுமார், வேதியியல் ஆசிரியர் லியோன் ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செய்து, அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினர். முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

