/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொட்டப்படும் கோழி கழிவுகளால் தேசிய நெடுஞ்சாலையில் துர்நாற்றம்
/
கொட்டப்படும் கோழி கழிவுகளால் தேசிய நெடுஞ்சாலையில் துர்நாற்றம்
கொட்டப்படும் கோழி கழிவுகளால் தேசிய நெடுஞ்சாலையில் துர்நாற்றம்
கொட்டப்படும் கோழி கழிவுகளால் தேசிய நெடுஞ்சாலையில் துர்நாற்றம்
ADDED : பிப் 10, 2025 01:37 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு செல்லும் சாலையில், டோல்கேட் அருகில் மத்துார், கண்ணன்டஹள்ளி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோழி இறைச்சி கடைக்காரர்கள் கடையில் சேகரமாகும் இறைச்சி கழிவுகளை, இரவு நேரத்தில் டோல்கேட் அருகில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மூட்டை, மூட்டையாக கொட்டிச் செல்கின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், மேல்மருவத்துார், மேல்மலையனுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றன. அதேபோல், இருசக்கர வாகன ஓட்டிகள் 1,000க்கும் மேற்பட்டோர் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். கோழிக்கழிவுகளின் துர்நாற்றத்தால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.