ADDED : அக் 14, 2026 05:00 AM

அ நிறம் | அளவு
ஓசூர்:ஓசூர்
அடுத்த சொக்கநாதபுரம் பகுதியில் சூதாட்டம் நடப்பதாக நல்லுார்
போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் நல்லுார்
இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை
நடத்தினர்.
அப்போது கல்லே அக்ரஹாரம் பகுதியில் சூதாட்டம் நடப்பது
தெரிந்தது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். ஓசூர் பகுதியை சேர்ந்த
நாகராஜ், 40, ரவிசங்கர், 43, ரகுபதி, 40, சங்கர், 40, ஆகிய நால்வரை
கைது செய்த போலீசார், 29 ஆயிரம் ரூபாய் மற்றும் 8 டூவீலர்களை பறிமுதல்
செய்தனர்.
