தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஜல்லி, எம்.சாண்ட் கடத்திய இரண்டு லாரிகள் பறிமுதல்

ஜல்லி, எம்.சாண்ட் கடத்திய இரண்டு லாரிகள் பறிமுதல்

ஜல்லி, எம்.சாண்ட் கடத்திய இரண்டு லாரிகள் பறிமுதல்


ADDED : அக் 14, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2026 04:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் பகுதியில் நேற்று முன்தினம் வருவாய் துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது, வரட்டனப்பள்ளி, பாரத கோவில் அருகே நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் எம்.சாண்ட்டை தபால்மேட்டில் இருந்து பி.சி., புதுார் வழியாக கடத்த முயன்றது தெரிந்தது. இதுகுறித்து வரட்டனப்பள்ளி வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணி அளித்த புகார் படி கந்திகுப்பம் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவரான போச்சம்பள்ளி சம்பத், 42, லாரி உரிமையாளர் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கோபிநாத், 45, ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.* ஓசூர், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு நின்ற லாரியில், 7 யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து ஜூஜூவாடி வி.ஏ.ஓ., திம்மராயன் அளித்த புகார் படி, சிப்காட் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us