/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பர்கூர் அருகே இரு லாரிகள் பயங்கர மோதல் நான்கு பேர் பலி; 34 எருமைகளும் உயிரிழப்பு
/
பர்கூர் அருகே இரு லாரிகள் பயங்கர மோதல் நான்கு பேர் பலி; 34 எருமைகளும் உயிரிழப்பு
பர்கூர் அருகே இரு லாரிகள் பயங்கர மோதல் நான்கு பேர் பலி; 34 எருமைகளும் உயிரிழப்பு
பர்கூர் அருகே இரு லாரிகள் பயங்கர மோதல் நான்கு பேர் பலி; 34 எருமைகளும் உயிரிழப்பு
ADDED : ஜன 27, 2025 04:02 AM

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே அதிகாலை நடந்த கோர விபத்தில், இரு லாரி டிரைவர்கள் உட்பட நான்கு பேர், 34 எருமைகள் பலியாகின.
மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, வெங்காயம் ஏற்றிய ஈச்சர் லாரி நேற்று முன்தினம் புறப்பட்டது. சோலாப்பூர் மாவட்டம், பந்தாபூரை அடுத்த கதிரியைச் சேர்ந்த நாராயணன், 45, லாரியை ஓட்டினார்.
கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அத்திமரத்துப்பள்ளம் பகுதியில் நேற்று காலை, 5:45 மணிக்கு லாரி வந்த போது, டிரைவர் நாராயணன் துாங்கி விட்டதால், கட்டுப்பாட்டை இழந்த லாரி, மீடியனை உடைத்துக் கொண்டு ஆறுவழிச் சாலையில் எதிர் திசையில் பாய்ந்தது.
அப்போது எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேராக வெங்காய லோடு லாரி மோதியது. எதிரே வந்த லாரியை திண்டுக்கல் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த அருள்ஜோதி, 54, ஓட்டி வந்தார். அந்த லாரியில், 40 எருமைகள் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு ஏற்றி வரப்பட்டன.
இந்த கோர விபத்தில், இரு லாரிகளும் நொறுங்கின. இரு லாரிகளின் டிரைவர்கள், எருமை ஏற்றி வந்த லாரியில் வந்த ஒட்டன்சத்திரம் மணிகண்டன், 35, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
எருமைகளுடன் வந்த லாரியில், ஆந்திர மாநிலம், நந்திபாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ், 31, காதர்பாஷா, 56, விஜய் பாபு, 3௪, வெங்காய லாரியில் வந்த சோலாப்பூரைச் சேர்ந்த கரீம் ஷபீர் பகவான், ௩௮, ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
நால்வரும் மீட்கப்பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், வழியிலேயே கரீம் ஷபீர் பகவான் இறந்தார்.
விபத்தில் 34 எருமைகள் பலியாகி விட்டன; ஆறு எருமைகள் காயத்துடன் தப்பின. இந்த விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.