/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இரு பெண்கள் உள்பட நால்வர் மாயம்
/
இரு பெண்கள் உள்பட நால்வர் மாயம்
ADDED : நவ 15, 2025 02:07 AM
கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அடுத்த போடரஹள்ளியை சேர்ந்தவர் சுகன்யா, 20. கடந்த, 12ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெண்ணின் பெற்றோர் குருப-ரப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர்.
அதில், மோரனஹள்-ளியை சேர்ந்த சுந்தர், 22, என்ற தனியார் நிறுவன ஊழியர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி அடுத்த ஆலப்பட்டியைச் சேர்ந்தவர் வித்யா, 27, தனியார் நிறுவன ஊழியர். கடந்த. 6ல், வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெண்ணின் பெற்றோர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதில். கிருஷ்ணகிரி அடுத்த வெலகலஹள்-ளியை சேர்ந்த சந்திரன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரி-வித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, மேல்சோமார்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்-குமார், 42. கடந்த, 31ல், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது உறவினர் அளித்த புகார் படி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
காவேரிப்பட்டினம் அடுத்த தேர்பட்டியை சேர்ந்தவர் மகா-விஷ்ணு, 31, நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியில் சென்-றவர், மாயமானார். இவரது மனைவி புகார்படி காவேரிபட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

