/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் ஊழியரிடம் ரூ.39 லட்சம் மோசடி
/
தனியார் ஊழியரிடம் ரூ.39 லட்சம் மோசடி
ADDED : அக் 02, 2024 07:30 AM
கிருஷ்ணகிரி: ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, ஓசூர் தனியார் நிறுவன ஊழியரிடம், 39.68 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், விகாஸ் நகரை சேர்ந்தவர் கதிர், 49, தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஆக., 13 ல் இவரை டெலி-கிராம் குரூப் ஒன்றில் மர்ம நபர் இணைத்தார். தொடர்ந்து அதில் குறுந்தகவல்கள் வந்தன. அதில், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பி, அவர் முதலீடு செய்தார்.
அதில் லாபம் கிடைக்கவே, தன்னிடமிருந்த, 39.68 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு முதலீடு செய்தார். அதன் பிறகு அவருக்கு எந்த தகவல்களும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.