/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் எனக்கூறி தனியார் ஊழியரிடம் ரூ.20 லட்சம் மோசடி

ADDED : அக் 09, 2024 06:41 AM
கிருஷ்ணகிரி: பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரிடம், 20.19 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த முகளூரை சேர்ந்தவர் லோகநாதன், 40, தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல் எண்ணை கடந்த ஆக., 29 ல் மர்மநபர் ஒருவர், வாட்ஸாப் குரூப்பில் இணைத்தார். அதில், ஷேர் மார்க்கெட் தொடர்பான விபரங்கள் இருந்தன. அதில் சில சந்தேகங்களை கேட்ட லோகநாதனை, ஒரு டெலிகிராம் குரூப்பிலும் இணைத்தனர். அதில், நாங்கள் குறிப்பிடும் கம்பெனிகளின் இணையதளம் மூலம், உங்கள் விபரங்களை பதிவிட்டு, ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. அதற்கான சில, 'லிங்க்'களும் அனுப்பப்பட்டன.
அதை நம்பிய லோகநாதன், அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு, 20.19 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதன் பின் அவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. முதலீடு செய்த பணமோ, லாபமோ வரவில்லை. அவரது மொபைல் எண்ணை இணைத்த வாட்ஸாப், டெலிகிராம் குரூப்புகளும் இயங்கவில்லை. சந்தேகமடைந்த லோகநாதன், அந்த எண்களை தொடர்பு கொண்டபோது அனைத்தும், 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லோகநாதன், நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.