/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பங்கு சந்தையில் அதிக லாபம் தருவதாக தனியார் ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி
/
பங்கு சந்தையில் அதிக லாபம் தருவதாக தனியார் ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி
பங்கு சந்தையில் அதிக லாபம் தருவதாக தனியார் ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி
பங்கு சந்தையில் அதிக லாபம் தருவதாக தனியார் ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி
ADDED : செப் 19, 2024 07:56 AM
கிருஷ்ணகிரி: ஓசூரில், தனியார் நிறுவன பெண் ஊழியரிடம், பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் எனக்கூறி, 5 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் பார்வதி, 40; தனியார் நிறுவன ஊழியர். இவரது, 'வாட்ஸாப்' எண்ணிற்கு கடந்த மே, 13ல் ஒரு, 'லிங்க்' வந்தது. அதை, 'கிளிக்'
செய்தவுடன், பல்வேறு புதிய வாட்ஸாப், டெலிகிராம், 'குரூப்'களில் அவர் இணைக்கப்பட்டார். அதில் ஒரு தனியார் நிறுவனம் பெயரில், பல்வேறு மெசேஜ் வந்தது. அதில், நாங்கள் குறிப்பிட்டுள்ள கம்பெனிகளின்
பங்குகளில் முதலீடு மற்றும் பொருட்களை வாங்கி, விற்றால், சிறிது நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பி, சிறிதளவு பணம் கட்டிய பார்வதிக்கு, லாபத்துடன் தொகை திரும்ப கிடைத்தது. இதனால் அவர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து, லாபத்துடன் தொகையை பெற்று வந்தார். கடந்த சில
தினங்களுக்கு முன் தன்னிடமிருந்த, 5 லட்சம் ரூபாயை மொத்தமாக அவர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். அதன் பின் அவருக்கு, எந்த தகவலோ, பணமோ வரவில்லை. இவரை தொடர்பு
கொண்ட அனைத்து எண்களும் முடங்கின. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பார்வதி, இது குறித்து நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.