/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி
/
தனியார் ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி
ADDED : அக் 18, 2024 07:21 AM
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரிடம், பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, 5 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மலை பையூரை சேர்ந்தவர் அருள்குமார், 41. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மொபைல் எண்ணை கடந்த செப்., 16ல், மர்மநபர்கள் 'இசட்2 - ஸ்டாக் மார்கெட் வின்னர்ஸ்' என்ற பெயரில் செயல்படும், 'வாட்ஸாப்' குரூப்பில் இணைத்தனர். அதில், பங்குசந்தை முதலீடு குறித்தும், அதிக லாபம் கிடைப்பதற்கு முதலீடு செய்யும், வங்கி கணக்குகள் உள்ளிட்டவையும் இருந்தன. அதில் சிறிதளவு முதலீடு செய்த அருள்குமாருக்கு, லாபத்துடன் முதலீட்டு தொகையும் திரும்ப கிடைத்தது. அதை நம்பி கடந்த சில வாரங்களுக்கு முன், தன்னிடமிருந்த, 5 லட்சம் ரூபாயை, மர்மநபர்கள் கூறிய, 4 வங்கி கணக்குகளுக்கு பிரித்து அனுப்பினார். ஆனால், எந்த தொகையும் அவருக்கு வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருள்குமார், நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.