/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கம்ப்யூட்டர் சென்டர் ஓனரிடம் ரூ.7.27 லட்சம் மோசடி
/
கம்ப்யூட்டர் சென்டர் ஓனரிடம் ரூ.7.27 லட்சம் மோசடி
ADDED : மார் 17, 2024 02:51 AM
கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரியை சேர்ந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரிடம், 7.27 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, கோ ஆப்பரேட்டிவ் காலனி, 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரமோத், 35; இவர், அதே பகுதியில் கம்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மொபைல் எண்ணுக்கு கடந்த பிப்., 27ல் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தங்களை மும்பை போலீசார் என அறிமுகம் செய்துள்ளனர். மேலும் உங்கள் பெயரில், பல கோடி ரூபாய் அளவிலான போதை பொருட்கள், கூரியரில் வந்துள்ளது. இதற்கு நீங்கள் தான் காரணம். இது குறித்து வழக்கு பதியாமல் இருக்க, 7.27 லட்சம் ரூபாயை, நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்ப கூறியுள்ளனர்.
இதை நம்பி, அவர்கள் கூறிய தொகையை பிரமோத் அனுப்பியுள்ளார். அதன்பின் அவர்கள், எந்த தகவலோ, மொபைலில் தொடர்போ கொள்ளவில்லை. தன்னிடம் யாரோ பேசி, பணம் பறித்ததை உணர்ந்த பிரமோத், நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

