ADDED : மே 26, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து, நேற்று இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர். ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபாலன் முகாமை துவக்கி வைத்தார். கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் சந்-திரவதன் தலைமையிலான குழுவினர் கண் பரிசோதனை செய்-தனர்.
இதில், 35 நபர்கள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெ-டுக்கப்பட்டு கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஒருங்-கிணைப்பாளர் கவுதம் மற்றும் சேஷாகிரி, ஆரோக்கிய பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.