ADDED : ஆக 25, 2025 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், ஓசூர் எவரெஸ்ட் அரிமா சங்கம் சார்பில், ஓசூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
டீல் நிறுவ-னத்தின் பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி பிரபு, ஓசூர் எவரெஸ்ட் அரிமா சங்க தலைவர் கணேஷ் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். கோவை அரவிந்த் கண் மருத்து-வமனை டாக்டர் ஜெயக்குமார் தலைமையிலான மருத்துவ குழு-வினர், 185க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில், 48 பேர் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக, கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.