/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
/
துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ADDED : செப் 28, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் நகராட்சியில், மொத்தம், 18 வார்டுகள் உள்ளன. இவற்றில், குப்பை, கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க, நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் என, 84 துாய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு, இலவசமாக பொது மருத்துவ முகாம், நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. நகராட்சி தலைவர் இந்திராணி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இதில், துணைத்தலைவர் தனபால் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.