/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புலியூரில் இன்று இலவச மருத்துவ முகாம்
/
புலியூரில் இன்று இலவச மருத்துவ முகாம்
ADDED : டிச 08, 2024 01:03 AM
புலியூரில் இன்று இலவச மருத்துவ முகாம்
ஓசூர், டிச. 8-
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை பகுதி மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், அதன் தலைவர் தம்பிதுரை
எம்.பி., செயலாளர் லாசியா தம்பி துரை ஆகியோர் ஏற்பாட்டில், போச்சம்பள்ளி அருகே புலியூர் வேளாங்கண்ணி பள்ளியில் இன்று (டிச., 8) காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை, இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.
இதில், கல்லுாரி டீன் ராஜா முத்தையா தலைமையில், இருப்பிட மருத்துவ அலுவலர் பார்வதி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் தீபக் ஆனந்த் ஆகியோர் அடங்கிய, 30 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர், பொதுமக்களுக்கு கண், காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு, பல், எலும்பு, பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உட்பட அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் செய்ய உள்ளனர். வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் உள்ள மக்களும் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற முடியும். 2,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடையும் வகையில், மருத்துவ முகாம் நடக்க இருப்பதாக, கல்லுாரி
நிர்வாகம் தெரிவித்துள்ளது.