ADDED : செப் 21, 2026 02:09 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அனைத்து வணிகர் சங்கம் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், இலவச
மருத்துவ முகாம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
அனைத்து வணிகர் சங்க தலைவர் உமாபதி தலைமை வகித்தார். முகாமில் சர்க்கரை நோய், நுரையீரல் தொடர்பான நோய்கள், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், கை, கால் மற்றும் மூட்டு வலி, எலும்பியல் சிகிச்சை, மார்பக புற்றுநோய் சிகிச்சை, காது, மூக்கு தொண்டை நோய்கள் சிறுநீரக பாதிப்பு, தோல் தொடர்-பான நோய்களை கண்டறிந்து, இலவசமாக சிகிச்சை வழங்கும் பொது மருத்துவ முகாம் நடந்தது. இதில், 300-க்கும் மேற்பட்டோர் தன் குறைகளை பல்வேறு சோத-னைகள் மூலம் கண்டறிந்தனர். முகாமில், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை மருத்துவ இயக்-குனர் டாக்டர் கிரீஸ் ஓங் கோல் தலைமையிலான மருத்துவ குழு-வினர் கலந்து கொண்டனர்.
நோய் கண்டறிந்த நோயாளிகளுக்கு, மருந்து, மாத்திரைகள் இல-வசமாக வழங்கினர். அறுவை சிகிச்சை செய்யும் நோயாளிகளை, உடனடியாக ஓசூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
