ADDED : செப் 21, 2026 02:08 AM

ஓசூர்: தமிழ்நாடு பிராமணர் சங்கம் தாம்ப்ராஸ் ஓசூர் கிளை, அனைத்து பிராமணர் சங்கங்கள், ஓசூர் ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்ய சபா ஆகி-யவை சார்பில், ஓசூர் சிஸ்யா பள்ளி வளாகத்தில், உலக நன்மைக்-காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும் வேண்டி, 3ம் ஆண்டு பஞ்ச கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஓசூர், நேதாஜி ரோடு கோதண்டராம சுவாமி, பாத்தக்கோட்டா சீதா ராம ஆஞ்சநேயர் சுவாமி, ஓசூர் ஏரித்தெரு ருக்மணி சத்ய-பாமா சமேத வேணுகோபால சுவாமி, அகரம் சுயம்பு அபய ஹஸ்த லட்சுமி நரசிம்மர் சுவாமி, மோர்னப்பள்ளி அபய ஹஸ்த நரசிம்மர் சுவாமி ஆகிய, 5 உற்சவ மூர்த்திகள் ஒரே இடத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் அர்ச்சனை செய்து, 5 சுவாமிகளின் உற்சவ மூர்த்திகளையும், ஒரே இடத்தில் தரிசனம் செய்தனர்.சிறப்பு சாத்துமறை, வேதபாராயணம் மற்றும் மகா சங்கல்பங்கள் நிறைவேற்றப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. பக்தர்க-ளுக்கு துளசி பிரசாதங்கள், சடாரி சேவை வழங்கப்பட்டன. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், கர்நாடக சங்கீதம், பஜனை கீர்த்-தனைகள் மற்றும் கிருஷ்ணன் வேடமணிந்த குழந்தைகளின் கோலாட்டம் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்-தனர்.
ஏற்பாடுகளை, தமிழ்நாடு பிராமணர் சங்க, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் நாகராஜன், செயலாளர் சீனிவாசன், மகளிரணி தலைவி ரோகிணி, ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்ய சபா தலைவர் ராஜகோ-பாலன், செயலாளர் ராமன் உட்பட பலர் செய்திருந்தனர்.
