ADDED : அக் 01, 2026 03:35 AM
உழவர் சந்தையில் 'சிசிடிவி' கேமராவுக்கு கோரிக்கை
கிருஷ்ணகிரி, அக். 1
கிருஷ்ணகிரி உழவர் சந்தையில், அடிக்கடி மொபைல் போன்கள் திருட்டு நடப்பதால், 'சிசிடிவி' கேமரா பொருத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி காந்தி
சாலையில் உள்ள உழவர் சந்தை கடந்த, 1999 - 2000ம் ஆண்டில் துவங்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் கூட்டம்
இரு மடங்காக இருக்கும். இந்நிலையில், உழவர் சந்தையில் வாரத்தில், 3 மொபைல் போன்கள் திருடப்படுவதாக பொது-மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'உழவர் சந்தையில் கூட்டம் அதிகமாக இருக்கும் கடைகளில், காய்கறி வாங்குவதில் தீவிரமாக இருக்கும்போது, பாக்கெட்டில் இருந்து மொபைல் போன்களை எடுத்து விடுகின்றனர். இதை பார்த்து, வட மாநில இளைஞர்கள் சிலரை பிடித்து போலீசிலும் ஒப்படைத்-துள்ளோம். ஆனாலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை. கடந்த வாரம் இங்கு, 40,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் திருடப்பட்டது. அதிலிருந்து, 28,000 ரூபாயும் எடுத்து விட்டனர். ஆனாலும் போன் காணவில்லை என, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உழவர் சந்தைக்கு வருகின்றனர். எனவே, உழவர் சந்தையில், 'சிசிடிவி' கேமரா பொருத்த அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
மேலும், உழவர் சந்தையிலுள்ள கழிப்பறையில் இருந்து வெளி-யேறும்
கழிவுநீர் குழாயை பாதாள சாக்கடை கால்வாயுடன் இணைக்கா-ததால், உழவர் சந்தையில் தேங்கும் கழிவு நீரை, மாதம் ஒரு முறை விவசாயிகள் தங்கள் சொந்த பணத்தில் வெளியேற்றி வரு-கின்றனர். எனவே இங்குள்ள கழிவுநீர் குழாயை பாதாள சாக்-கடை கால்வாயுடன் இணைக்க,
விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
