ADDED : அக் 01, 2026 03:35 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சின்ன பேலகொண்டப்-பள்ளி கிராமத்தின் வழியாக, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு ஹோண்டா ஜாஸ் கார் சென்றது. பெரிய பேலகொண்டப்பள்ளி சாலையில், கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையறிந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.எஸ்.ஐ., ஆனந்தகுமார் மற்றும் போலீசார், சம்பவ இடம் சென்று காரை மீட்டு விசாரித்-தனர்.
காருக்குள் சோதனை செய்தபோது, பின்புற இருக்கையில் மொத்தம், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 100 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்
இருந்தன. மேலும், காருக்குள் இரு வெவ்வேறு நம்பர் பிளேட்-டுகள் இருப்பது தெரிந்தது.
கர்நாடகா மாநிலத்திலிருந்து குட்காவை கடத்தி வந்த கும்பல், கார் கவிழ்ந்ததால் அதை மீட்க முடியாமல், வேறொரு காரை கொண்டு வந்து, குறிப்பிட்ட அளவு குட்கா மூட்டைகளை மட்டும் எடுத்து சென்றுள்ளது.
ஆனால், காரின் இடிபாடுகளில் சிக்கிய குட்கா மூட்டைகளை, மர்ம
கும்பலால் எடுத்து செல்ல முடியவில்லை. அது மட்டும் போலீசார் வசம் சிக்கியுள்ளன. காரில் வந்த குட்கா கடத்தல் கும்பல் குறித்து அறிய, அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா காட்சி-களை, மத்திகிரி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
