/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெயின்டரை கொன்று புதைத்த 3 பேர் கும்பல் ஓசூரில் கைது
/
பெயின்டரை கொன்று புதைத்த 3 பேர் கும்பல் ஓசூரில் கைது
பெயின்டரை கொன்று புதைத்த 3 பேர் கும்பல் ஓசூரில் கைது
பெயின்டரை கொன்று புதைத்த 3 பேர் கும்பல் ஓசூரில் கைது
ADDED : மே 27, 2025 02:12 AM
ஓசூர் ஓசூர் ராம்நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது, 24. இவர் தன் வீட்டில் வைத்திருந்த, 40,000 ரூபாய் காணாமல் போனது. இதனால் அவர், வீட்டின் மற்றொரு சாவியை வைத்திருந்த ராம்நகரை சேர்ந்த சூபி, 23, என்பவரிடம் கேட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டு, சூபியை தாக்கினார். சூபியின் நண்பரான, ராஜகணபதி நகரை சேர்ந்த பெயின்டர் அர்ஜூன், 23, கடந்த, 30ல் சாகுல் அமீதுவிடம் தட்டிக்கேட்டார். சாகுல் அமீது தரப்பினர் அர்ஜூனை தாக்கினர்.
ஆத்திரமடைந்த அர்ஜூன், கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அர்ஜூனை கொல்ல திட்டமிட்ட சாகுல் அமீது, நண்பர்களான ராம்நகரை சேர்ந்த பவன் பிரகாஷ், 24, சைபு, 22, ஆகியோருடன் கடந்த, 2ம் தேதி, அவரை காரில் கடத்திச்சென்று தாக்கியதில் அர்ஜூன் இறந்தார். சடலத்தை, சூளகிரி அடுத்த சின்னாறு அருகே, அரசு நிலத்தில் புதைத்தனர்.
அர்ஜூன் வீடு திரும்பாததால், அவரது நண்பரான ராம்நகரை சேர்ந்த கண்ணன், 25, ஓசூர் டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். விசாரணையில், அர்ஜூனை கொன்றது தெரிந்து, சாகுல் அமீது, பவன்பிரகாஷ், 24, சைபு, 22, ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களை இன்று (மே 27), சின்னாறு அழைத்து சென்று, தாசில்தார் முன்னிலையில், அர்ஜூன் சடலத்தை தோண்டி எடுக்க, ஓசூர் டவுன் போலீசார் முடிவு செய்துள்ளனர்.