sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ராமநாயக்கன் ஏரிக்கு கங்கா ஆரத்தி

/

ராமநாயக்கன் ஏரிக்கு கங்கா ஆரத்தி

ராமநாயக்கன் ஏரிக்கு கங்கா ஆரத்தி

ராமநாயக்கன் ஏரிக்கு கங்கா ஆரத்தி


ADDED : அக் 24, 2024 02:15 AM

Google News

ADDED : அக் 24, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: நதிகளில் குப்பை கொட்டாமல் துாய்மையாக வைத்து, வணங்க வேண்டும் என வலியுறுத்தி, அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகி-யவை சார்பில், கர்நாடகா மாநிலம், தலைகாவிரியில் இருந்து கடந்த, 20 ல், 14 ம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை புறப்பட்டது.

வரும், 13ல், பூம்புகாரில் ரத யாத்திரை நிறைவு பெறுகிறது. தமி-ழக எல்லையான, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு நேற்று வந்த ரதத்திற்கு, தமிழ்நாடு பிராமணர் சங்க (தாம்பிராஸ்)ஓசூர் மாநகர தலைவர் சுதா நாகராஜன், நீர்நிலை பாதுகாப்பு இயக்க தலைவர் சண்முகவேல், துணைத்தலைவர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து, நாதஸ்-வரம், கோலாட்டம், திருமுறை வேதம், பிரபந்த கோஷத்துடன், எம்.ஜி., ரோடு, ராமர் கோவில், ஏரித்தெரு வழியாக ராமநாயக்கன் ஏரிக்கு காவிரி ரதம் ஊர்வலமாக சென்றது. ஓசூர் நீர்நிலை பாது-காப்பு இயக்கம் மற்றும் அகில பாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில், ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் கங்கா ஆரத்தி விழா நேற்று மாலை நடந்தது. அகில பாரத சன்னியாசிகள் சங்க துணைத்தலைவர் சுவாமி ராமா-னாந்தா, காளீஸ்வரானந்தா, லோபோமுத்ரானந்தா, நாகானந்தா, மீனாட்சி சுந்தரேஸ்வரானந்தா, கோரஷ்னானந்தா, வீரபத்ரனாந்தா ஆகியோர், ராமநாயக்கன் ஏரிக்கு சிறப்பு பூஜை செய்து கங்கா ஆரத்தி காட்டினர். நீர்நிலைகளை பாதுகாப்போம் என பொது-மக்கள் உறுதியேற்றனர். ஓசூர் மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பா.ஜ., மாநில தொழில் பிரிவு நிர்வாகி ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us