ADDED : ஜூலை 08, 2026 04:24 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் தலைமையிலான போலீசார்,
நேற்று முன்தினம், காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றுபாலம்,
முத்துமாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது
அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக சென்றவரை நிறுத்தி,
சோதனையிட்டதில், 1.2 கிலோ கஞ்சா கடத்த முயன்றது தெரிந்தது.
விசாரணையில், அவர் காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்த
தினேஷ், 23, என தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்த
கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
