/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எரிவாயு நுகர்வோர் கலந்தாய்வு கூட்டம்
/
எரிவாயு நுகர்வோர் கலந்தாய்வு கூட்டம்
ADDED : அக் 29, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நடத்தப்படும் எரிவாயு நுகர்வோர், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் வரும், 31ல் நடக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்ட அரங்கில் நடக்கும் முகாமிற்கு, டி.ஆர்.ஓ., தலைமையில் வகிக்கிறார்.
இதில், மாவட்டத்திலுள்ள அனைத்து எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். புகார்கள், குறைபாடுகள் இருப்பின், எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் நுகர்வோர்கள் கலந்து கொள்ளலாம்.

