/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு கோவில்களில் திருடிய முதியவர் கைது
/
வெவ்வேறு கோவில்களில் திருடிய முதியவர் கைது
ADDED : அக் 29, 2025 01:10 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, கொத்தகோட்டை பெருமாள் கோவிலில், கடந்த ஒரு மாதத்திற்கு முன், கோவிலின் பூட்டை உடைத்து, 5 அடி உயர இரண்டு பித்தளை குத்துவிளக்கு மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கை ஆகியவை திருட்டு போனது.
அதேபோல் கடந்த மூன்று நாட்களுக்கு முன், புளியாண்டப்பட்டி மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த காணிக்கை திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையிலான தனிப்படையினர், திருடனை தேடி வந்தனர். நேற்று காலை மத்துார் அடுத்த, புளியாண்டப்பட்டியை சேர்ந்த ரமேஷ், 60, என்பவரை பிடித்து விசாரித்ததில் அவர், கோவில்களில் திருடியது தெரிந்தது. அவரை மத்துார் போலீசார் கைது செய்தனர்.

