/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்லுாரியில் பாலின விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
கல்லுாரியில் பாலின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 04, 2025 01:17 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் கல்பனா வரவேற்றார்.
இதில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மனநல மருத்துவத்துறை உதவி பேராசிரியர் வித்யா மற்றும் மகப்பேறு மருத்துவ ஆலோசகர் அஸ்வினி ஆகியோர், பாலின உளவியல் தாக்கங்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் பேசினர். அதில், பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வை வளர்த்தல், மன அழுத்தம் அதிகரிப்பு, பாலின அடிப்படையிலான வேறுபாடுகள், மனித மனதின் வளர்ச்சி சிந்தனை, உணர்ச்சி, சமூக உறவுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.