கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை சேர்ந்தவர் அர்ச்சனா, 22, தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 7ல், வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தனர். அதில், ஊத்தங்கரை பெருமாள்குப்பம் பகுதியை சேர்ந்த ரகு என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
* பேரிகை அடுத்த பண்ணப்பள்ளியை சேர்ந்த சீனிவாசன் மகள் பிந்து, 22, எம்.எஸ்சி., பட்டதாரி; நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை பேரிகை போலீசில் கொடுத்த புகாரில், தேன்கனிக்கோட்டை அடுத்த பாலேகுளியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவா, 23, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார், பிந்துவை தேடி வருகின்றனர்.தளி அடுத்த காரண்பாளையத்தை சேர்ந்த நஞ்சப்பா மனைவி சுதா, 19; கடந்த, 6 மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. கணவர் புகார்படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.