/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை 'டல்'
/
போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை 'டல்'
ADDED : அக் 13, 2025 02:07 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு தர்ம-புரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களிலி-ருந்து, வியாபாரிகள், விவசாயிகள், 2,500க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் நாட்டு கோழிகளை நேற்று விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த செப்., 17-ல் புரட்டாசி மாதம் பிறந்த நிலையில், பெரும்பாலான மக்கள், பெருமாளுக்கு விரதமி-ருந்து கோவிலுக்கு செல்வதால், ஆடுகள் விற்பனை மந்தமாகவே இருந்தது.
நேற்று முன்தினம் புரட்டாசி, 4வது சனிக்கிழமை முடிந்த நிலையில் வரும், 20ல் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்-ளதால், ஆடுகள் விற்பனை அதிகரிக்கும் என, அதிகளவு ஆடு-களை வியாபாரிகள், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தி-ருந்தனர். ஆனால், வரும், 17ம் தேதி வரை புரட்டாசி மாதம் உள்ள நிலையில், நேற்றும் போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமாகவே இருந்தது. இதனால் விற்பனையாகாத, 1,500க்கும் மேற்பட்ட ஆடுகளுடன், விவசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பியதால், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்றும், ஆடு விற்பனை மந்தநிலையிலேயே இருந்தது.