/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
27 குண்டுகள் முழங்க பெண் காவலர் உடல் தகனம்
/
27 குண்டுகள் முழங்க பெண் காவலர் உடல் தகனம்
ADDED : அக் 13, 2025 02:06 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, சந்துாரை சேர்ந்தவர் ரமாமணி, 34. மத்துார் போலீஸ் ஸ்டேஷனில், 2023 ஜூலை, 1 முதல் முதன்மை காவலராக பணியாற்றினார்.
ஊத்தங்-கரையில் நேற்று முன்தினம் காலை நடந்த கவாத்து பயிற்சியில் பங்கேற்று விட்டு டி.வி.எஸ்., ஸ்கூட்டியில் திருவண்ணாமலை -- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். எதிரே சுசிகி -150 சிசி பைக்கில் அதிவேகமாக வந்த கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த அசோக், 35, என்பவர் மொபைட் மீது மோதினார். இதில் ரமாமணி தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்து பலியானார்.
இவரின் உடலுக்கு நேற்று முன்தினம் மாலை, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை அஞ்சலி செலுத்தி, அவரின் குடும்-பத்தாருக்கு ஆறுதல் கூறிய நிலையில், இறுதி சடங்கிற்கான உத-வித்தொகை ஒரு லட்சம் ரூபாயை
வழங்கினார்.
இந்நிலையில் நேற்று மதியம், 12:00 மணிக்கு அவரின் சொந்த ஊரான சந்துாரில், மயானத்தில் நடந்த இறுதி சடங்கில், ரமாம-ணியின் உடலுக்கு, மத்துார் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலை-மையில், கிருஷ்ணகிரி ஆயுதப்படை போலீசார், 27 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். பிறகு மயா-னத்தில் அவரின் உடல் தகனம்
செய்யப்பட்டது.