/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.13 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
/
ரூ.13 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
ADDED : செப் 20, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பைநல்லுார், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் வாரச்சந்தைக்கு நேற்று, 200க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 7,300 முதல், 7,600 ரூபாய் வரை விற்பனையானது. புரட்டாசி மாதம் என்பதால், சந்தையில் ஆடுகளின் வரத்து மற்றும் அதன் விலை குறைந்து, 13 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.