/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
/
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ADDED : மார் 31, 2025 02:01 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு யுகாதி, ரம்ஜான் பண்டிகை எதிரொலியால் நேற்று 2,500க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர்.
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, திருப்பத்துார் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்திலிருந்து ஆடுகளை விற்-கவும், வாங்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
இதனால், 10 கிலோ எடை கொண்ட ஆடு, 6,000 முதல் 7,000 ரூபாய் வரையும், 15 கிலோ ஆடு 8,000 முதல், 9,000 ரூபாய் வரையும், 20 கிலோ ஆடு 12,000 முதல், 14,000 ரூபாய் வரையும்
விற்பனையானது.
நேற்று யுகாதி என்பதால் அதிகாலை முதலே ஆடுகளை வாங்க, கிராமங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர்.
இன்று ரம்ஜான் பண்டிகை என்பதால், நேற்று திருப்பத்துார், வாணியம்பாடி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த-வர்கள் அதிகளவு வந்து, ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
இதனால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். போச்சம்பள்ளி வாரச்சந்தையில், 3 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.