/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது
ADDED : செப் 04, 2025 01:15 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு பள்ளி ஆசிரியர்கள், 8 பேர் மற்றும் ஒரு தனியார் பள்ளி முதல்வர் ஆகியோருக்கு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்
வருமாறு:
ஓசூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட, தளி அடுத்த சாக்கலப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சத்தியசீலன், ஓசூர் அரசனட்டி ஊராட்சி ஒன்றிய நடு
நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை உமாகார்த்திகா, மூக்கண்டப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சரவணன், ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை நர்மதாதேவி ஆகியோருக்கு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில், சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை சியாமளா, போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பிரபாகரன், ஆலேரஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அருள்ஜோதி, பூமலை நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் கிளாரன்ஸ் தேவதாஸ் ஆகியோருக்கு, நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
காவேரிப்பட்டணம் அருகே, கொட்டாவூரில் உள்ள அசோக் மிஷன்ஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரேம்குமார் என்பவருக்கு, நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் நாளை (செப்.5) சென்னையில் நடக்கும் ஆசிரியர் தின விழாவில், நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.