/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் புதிய நகர வளர்ச்சி திட்டம் அரசு ஒப்புதல்
/
ஓசூர் புதிய நகர வளர்ச்சி திட்டம் அரசு ஒப்புதல்
ADDED : ஜன 24, 2025 12:29 AM
சென்னை:ஓசூர் புதிய நகர வளர்ச்சி திட்டத்திற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில், புதிய நகர மேம்பாட்டிற்காக, 'ஓசூர் புதிய நகர வளர்ச்சிக்கான வரைவு மேம்பாட்டு திட்டம் -- 2046' தயார் செய்யப்பட்டது. பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டு திட்டம் இறுதி செய்யப்பட்டது.
இதற்கு ஒப்புதல் வழங்கும்படி, நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனர் அரசுக்கு கடிதம் எழுதினார். அதை பரிசீலனை செய்த அரசு, 'ஓசூர் புதிய நகர வளர்ச்சி பகுதிக்கான மேம்பாட்டு திட்டம் - 2046'க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் விபரம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஓசூர் புதிய நகர வளர்ச்சி திட்டம் விபரங்கள், ஓசூர் நகராட்சி அலுவலகத்தில், வேலை நாட்களில், அலுவலக நேரத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

