/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் உட்பட 11 பேர் காயம்
/
அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் உட்பட 11 பேர் காயம்
அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் உட்பட 11 பேர் காயம்
அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் உட்பட 11 பேர் காயம்
ADDED : டிச 03, 2025 08:10 AM

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி ரயில்வே தரைபாலத்தில், 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், டிரைவர் உட்பட, 11 பேர் காயமடைந்தனர்.
திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி செல்லும் அரசு பஸ்சும், ஓசூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ்சும் நேற்று மதியம், 3:40 மணியளவில் சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தை கடந்தன. அப்போது கட்டுப்பாட்டை இழந்து, இரு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், 10 பயணிகள் காயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்த, டிரைவர் சீனிவாசன், 48, திருவண்ணாமலையை சேர்ந்த பார்த்திபன், 35, அதே பகுதியை சேர்ந்த சோனா, 30, சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த திவ்யா, 38, அருணகிரி மங்களத்தை சேர்ந்த தேவி, 24, உள்பட, 11 பேர் காயமடைந்தனர். அவர்களை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.