/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு மயான ஆக்கிரமிப்புகள்:சோளக்காப்பட்டியில் அகற்றம்
/
அரசு மயான ஆக்கிரமிப்புகள்:சோளக்காப்பட்டியில் அகற்றம்
அரசு மயான ஆக்கிரமிப்புகள்:சோளக்காப்பட்டியில் அகற்றம்
அரசு மயான ஆக்கிரமிப்புகள்:சோளக்காப்பட்டியில் அகற்றம்
ADDED : செப் 28, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சோளக்காப்பட்டி கிராமத்தில், அரசு மயானத்திலுள்ள, 64 சென்ட் நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
அரசு மயானத்தை அளந்து தரக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.
அதன்படி நேற்று, சோளக்காப்பட்டி கிராமத்திற்கு சென்ற ஊத்தங்கரை துணை தாசில்தார் சகாதேவன் மற்றும் வருவாய் துறையினர், அரசு மயான ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானத்தை அளந்து காண்பித்து, ஆக்கிரமிப்பு நிலத்தை விட்டுச்செல்ல சம்மந்தப் பட்டவர்
களுக்கு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.