/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 04, 2025 01:06 AM
கிருஷ்ணகிரி, வேலை வாய்ப்பு, பயிற்சித்துறை நிர்வாகம் மற்றும் போலீசாரை கண்டித்து, கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில்,நேற்று மதியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெகதாம்பிகா பேசியதாவது:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 5ம் கட்டமாக கடந்த, 2ல், சென்னையில் பெருந்திரள் முறையீடு நடந்தது. இதில் இயக்குனரோடு நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
பேச்சுவார்த்தையின் போது, சங்க நிர்வாகிகளை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்ட நிர்வாகத்தை கண்டித்தும், மாநில பொருளாளர் திருநாவுக்கரசை தாக்கும் வகையில் நடந்து கொண்ட போலீசாரை கண்டிக்கின்றோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
* ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்,சங்க வட்டார தலைவர் சுபாஷ்சந்திரபோஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.